திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 19.03.2018-ம் தேதி பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக தனது கணவர் மிரட்டுவதாக கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் புகார் கொடுத்தவரின் தகவலில் உண்மைத்தன்மை இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து, கரூரை சேர்ந்த முத்துக் கருப்பன் மகன் தேவ்ஆனந்த் (41) என்பவரை கைது செய்தனர். கடந்த 20.09.2018-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தின் நீதிபதி பாலாஜி விசாரணையை முடித்து தேவ்ஆனந்த் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், மற்றொரு சட்ட பிரிவின் கீழ்1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், இன்னும் ஒரு சட்ட பிரிவின் கீழ்2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் ஆக (மொத்தம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, ஜாமீனில் இருந்த தேவ்ஆனந்த் கைது செய்யப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தத் தீர்ப்பு திருச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கி்றது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 962