புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். ஷவர்மா என்ற உணவு வகையை
நிறையப்பேர் கடைகளில் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதை தயார் செய்வதற்கு கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக புகார் இருக்கிறது. இந்நிலையில், இன்று(அக்.,14) புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த, 7 வயது சிறுவன் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தியதாக புகார் கிளம்பியதால் அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த உணவகத்துக்கு “சீல்” வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.