சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவர், மனைவி தனபாக்கியம் (50), மகன் தேன்வளவன் (21), மகள் ஆர்த்தி (24) மற்றும் உறவினர் காந்திமதி (50) ஆகியோருடன் ஒரு காரில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டு மேட்டூருக்கு திருச்சி- முசிறி சாலையில் வந்து கொண்டிருந்தனர். பெரமூர் அருகே வந்போது திடீரென காரின் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆர்த்தி, தேன்வளவன், காந்திமதி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனபாக்கியம் மற்றும் சசிக்குமார் புற நோயாளிகளாக முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து முசிறி போலீசார், காரை ஓட்டி வந்த சசிகுமார் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.