5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக வரித்துறை ஆணையராக இருந்த தீரஜ்குமார், தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்கலா உஷா சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குமரகுருபரன் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.