திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் மதில் சுவர்கள் சுற்றிய பகுதிகளில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்சிற்றம்பலம் உழவாரப்பணி குழுவினர் 450க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு கோவில் குளம், மதில் சுவர் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பல இடங்களில் செடி-கொடிகளை அகற்றி தூய்மை படுத்தினர். அவர்களின் இந்த செயலுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Comments are closed.