Rock Fort Times
Online News

ஒரு வார வேட்டையில் 40 ரவுடிகள் கைது- ஐஜி கார்த்திகேயன்.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த ஒரு வார, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுள்ள நீதிமன்ற பிடிகட்டளைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேற்கண்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1313 நீதிமன்ற பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சிறப்பு தேடுதல் வேட்டையில் 40 ரவுடிகளின் மீது இருந்த பிடிவாரண்ட் நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இந்த 7 நாட்களில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொலை, போஸ்கோ வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுபடுத்த எடுக்கப்ட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீதும் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்