திருச்சி, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் யுவராணி (30). இவர், திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மணிவண்ணன். சம்பவத்தன்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை வாசலின் அருகே வைத்துவிட்டு மார்க்கெட் சென்றிருந்தனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பி அவர்கள் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கே கால் பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. அவர்கள் வெளியே சென்று இருந்த நேரத்தில் சாவியை எடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று நகைகளை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசில் யுவராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.