தமிழகத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 42%ல் இருந்து 46% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42% ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இது பொருந்தாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.