தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம், அரசுத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் சரியான முறையில் கொண்டு செல்லும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக “பெ. அமுதா, ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த 4 அதிகாரிகளும் தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்து, நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் ஆவர். அவர்களின் அனுபவமும், நிர்வாகத் திறமையும், அரசு தகவல்களைத் தெளிவுற எடுத்துரைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனத்தின் மூலம், அரசு தகவல்கள் விரைவாகவும், துல்லியமாகவும் பொதுமக்களைச் சென்றடையும் என்றும், ஊடகங்களுக்குத் தேவையான விளக்கங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments are closed.