Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த 4 பேர் கைது

திருச்சி காஜா பேட்டை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவக்குமார் என்கிற மூக்கன் ( வயது 29 ).
இவர், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர், சங்கிலியாண்டபுரம் மணல் வாரித்துறை ரோடு பொதுக்கழிப்பிடம் அருகில் சென்று கொண்டிருந்தபோது இவரை 4 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பாலக்கரை போலீசில் சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக கிஷோர் கண்ணன், அறிவழகன், ஹரிகரன், நவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ,கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்