இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிசை துவங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பந்துவீச்சாளர் மார்க் வுட் 33 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, குல்தீப் , அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.