திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று ( 10.11.2023 ) காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் அதிவேக விரைவு ரயில் காலை 9-40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடையை வந்தடைந்தது. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணத்தின் போது பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. படியில் தொங்கிக் கொண்டோ, படியில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, ரயில்வே கேட் போட்ட பிறகு தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில் வரும்போது தண்டவாங்களை கடந்து செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலாவது நடை மேடையில் நாடகம் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில் :
தீபாவளி உள்பட பண்டிகை காலங்களில் ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஹீட்டர்ஸ், கேஸ் சிலிண்டர் கொண்டு செல்லக்கூடாது. திருச்சி கோட்டத்தில் ரயிலில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றது தொடர்பாக 2 வழக்குகளும், லெவல் கிராசிங் தொடர்பாக 20 வழக்குகளும், ரயில் பெட்டியில் புகை பிடித்தது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளது
என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.