Rock Fort Times
Online News

தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்…* மெச்சத்தக்க பணிக்கான பதக்கத்துக்கு,17 பேர் தேர்வு!

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி, ஐ.ஜி.,க்கள் கார்த்திகேயன், லஷ்மி ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர, மெச்சத்தக்க பணிக்கான மத்திய அரசின் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரம் வருமாறு:

1.எஸ்.பி. ஜெயலட்சுமி

2.துணை கமிஷனர் சக்திவேல்

3.எஸ்.பி., விமலா

4.டி.எஸ்.பி., துரைபாண்டியன்

5.ஏ.டி.எஸ்.பி., கோபாலசந்திரன்

6.ஏ.டி.எஸ்.பி., சுதாகர் தேவசகாயம்

7.டி.எஸ்.பி., சந்திரசேகர்

8.உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசில்

9.உதவி கமிஷனர் முருகராஜ்

10.இன்ஸ்பெக்டர் பொன்ராஜ்

11.டி.எஸ்.பி., வேல்முருகன்

12.இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்

13.இன்ஸ்பெக்டர் எம்.ரஜினிகாந்த்

14.இன்ஸ்பெக்டர் பி.ரஜினிகாந்த்

15.எஸ்.ஐ., ஸ்ரீவித்யா

16.எஸ்.ஐ., ஆனந்தன்

17.எஸ்.ஐ., கண்ணுசாமி

மற்ற துறைகளில் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகள் விபரம் பின்வருமாறு:

தீயணைப்பு துறை

மாணிக்கம், மகாலிங்கம், மூர்த்தி, மாவட்ட அதிகாரி

பாலகிருஷ்ணன், சரணவபாபு, துணை இயக்குநர்

ஊர்க்காவல் படை

கம்பெனி கமாண்டர் ரவி,

டிவிஷனல் கமாண்டர் முத்துக்கிருஷ்ணன்,

சிறைத்துறை

வேலூர் டிஐஜி சண்முகசுந்தரம்,

உதவி ஜெயிலர் வேலுச்சாமி,

ஆறுமுக பெருமாள்

கிரேடு 1 வார்டர் ஜோசப் தலியத் பெஞ்சமின், ஜோசப் பாண்டியன்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்