Rock Fort Times
Online News

பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி: “விபத்துக்கு காரணம் கலெக்டரே” கைகாட்டியது ரயில்வே…!

கடலூரில், செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று( ஜூலை 8) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில், வேன் மீது மோதியது. இதில் அந்த வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரெயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது. இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரெயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது என தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்