Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது …!

திருச்சி, பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல கல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முகமது ரஃபீக் (வயது 38) என்பவரை பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹமீலா பானு மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.டி மைதானம் கேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெரு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் ஜெயஸ்ரீ ( 21), திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ( 27 )ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த அகல்யா (22), அரியமங்கலம் மலையப்பன் நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற குட்செட் மதன் ( 41) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்