Rock Fort Times
Online News

பஸ் நிறுவன மோசடி வழக்கில் 3 பேர் கைது ! திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!

தஞ்சை பஸ் நிறுவன மோசடி வழக்கில் அலுவலக உதவியாளர்கள் 3 பேரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 6,131 பேரிடம், சுமார் 410 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அத்துடன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். இதில் கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்து, பணத்தை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற அலுவலக உதவியாளரான அய்யம்பேட்டையை சேர்ந்த முகமது சுபாந்தீரீயோ( 56), முகமது ரபீக்(46), முகமது சாதிக்(57) ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்