திருச்சி அரியமங்கலம் பட்டயதாரர் தெருவை சேர்ந்தவர் கமருதீன். இவரது மகன் ரஹமத்துல்லாஹ். இவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டு அருகில் நிறுத்தி இருந்தார். அந்த வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இருசக்கர வாகனம் திருடியதாக பிரவீன் ராஜ் மற்றும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.