Rock Fort Times
Online News

காலணியின் அடிப்பாகத்தில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், பயணம் செய்யும் பயணிகளை வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.

அந்தவகையில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் அணிந்து வந்த காலணியின் அடிப்பாகத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 401.5 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு 28 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்