Rock Fort Times
Online News

சத்துணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: சத்துணவு அமைப்பாளர்- சமையலர் “சஸ்பெண்ட்”…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மதியம் சத்துணவில் சாம்பார் சாதம், சுண்டல் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 27 மாணவர்களை அருகில் உள்ள அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அங்கு திரண்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரமற்ற உணவை விநியோகித்த சத்துணவு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விசாரனை மேற்கொண்ட அதிகாரிகள், அறிக்கையை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் அளித்தனர். இந்நிலையில் பணியில் அலட்சியமாக இருந்த சத்துணவு அமைப்பாளர் நாகம்மாள், சமையலர் சாந்தி ஆகியோரை பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்