திருச்சி மாவட்டம், முசிறி சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தா.பேட்டை போலீசில் வடிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.