வெயில் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். இதனால் ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். சிலர் சுற்றுலா தளங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா செல்கின்றனர். இதனால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இது ஒருபுறம் இருக்க கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம் முழுவதும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.