மதுரையில் நடக்கும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செங்கல்பட்டில் இருந்து மதுரை நோக்கி 20க்கும் மேற்பட்டவர்களுடன் டூரிஸ்ட் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அருகே வந்தபோது குறுக்கே இரு சக்கர வாகனம் ஒன்று சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. இதனால், அதில் இருந்தவர்கள் அய்யோ, அம்மா என்று அலறினார்கள். தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வேனுக்குள் சிக்கி தவித்தவர்களை கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பேருந்து நிழல்குடை அருகே பேரிக்காட் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த இடத்தில் பேரிகார்ட் வைக்கப்பட்டுள்ளது. பேரிக்காட் இல்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.