Rock Fort Times
Online News

திருச்சி, பிராட்டியூர் அருகே ஆலய பராமரிப்பின் போது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி…!

திருச்சி, பிராட்டியூர் அருகே செயல்பட்டு வரும் பெந்தகோஸ் ஆலயத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று(24-04-2025) வழக்கம்போல் ஊழியர்கள் சிலர் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. நான்கு சக்கரம் பொருந்திய நகறும் உயர ஏணியில்(ஜாலி ) மேலே இருவர் மற்றும் ஏணியின் அடி பகுதியில் இருவர் என 4 பேர் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக ஏணி சக்கரம் நகர்ந்து உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசி உள்ளது. இதில் ஏணியில் மேலே நின்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள தன்னாங்குடி கிராமத்தை சேர்ந்த கோபி என்கிற வெள்ளைச்சாமி, தர்மபுரியை சேர்ந்த பாக்கியராஜ் ஆவர். மேலும், காயம் அடைந்த சிவக்குமார், நடராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த 2 பேர் உடல்களையும் போலீசார் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்