திருச்சியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பஞ்சப்பூர் மற்றும் கோரையாறு ஆகிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரமணி மற்றும் யசோதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.