Rock Fort Times
Online News

திருச்சியில் போதை மருந்து, மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் பிடிபட்டனர்…!

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகம் பீமநகர் ஹீபர் ரோடு பகுதியில் போதை மருந்து மற்றும் மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், பாலக்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் பீமநகர் ஹீபர்ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விற்பனைக்காக போதை மருந்து, மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 24), ஹரிஷ் ரகுமான் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான ஹரிஹரன் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்