Rock Fort Times
Online News

ஐஸ் வியாபாரி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரும்புள்ளிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 60). ஐஸ் வியாபாரி. இவர் தனது மகன் கோபி என்கிற மாரிமுத்து, 3-வது மனைவி ஸ்ரீரங்கம்மாளுடன் கடந்த 8.07.23 அன்று காலை இரு சக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலையில் ஆண்டவர் கோவில் கலிங்கப்பட்டி பிரிவு அருகே சென்றபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக அாிவாளால் வெட்டியது. இதில், குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிமுத்து, ஸ்ரீரங்கம்மாள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கொலை தொடர்பாக கரும்புலிப்பட்டியை சேர்ந்த ஸ்டாலின் (21), மணிகண்டன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளிய வந்தால் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐபிஎஸ் பரிந்துரை செய்ததன்பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்