அமலாக்க பணியக குற்றப் புலனாய்வுத்துறை திருச்சி ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சுமார் 12 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 45), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற மணிமேகலை (30) என்பதும், அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை வாங்கி தமிழகத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments are closed.