திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் திருச்சியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் அவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருடைய பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் முசிறி அருகே உள்ள பெரமங்கலம் கிராமம் மணியம்பட்டி திமுக கிளைச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.