திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 23ம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் ரவிசந்திரன் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகுல் (வயது 22), குணசேகரன் மகன் சச்சின் (24), ராஜசேகர் மகன் ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழ கல்கண்டார்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் லோகேஷ் (23) என்பது தெரிய வந்தது. அதன்பேரில் லோகேஷை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று ராக்கி ( எ) ராகேஷ் , சச்சின் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.