Rock Fort Times
Online News

அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி பச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 33).இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அரசு போக்குவரத்து கழக மலைக்கோட்டை பணிமனையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார். கோட்டை ரெயில்நிலையம் சாலையில் வந்த போது, அங்குள்ள தனியார் நிறுவனம் முன் கண்டெய்னர் லாரியை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி சரக்குகளை இறக்கியதாக தெரிகிறது. இதனால் பஸ் டிரைவர் சந்தோஷ், லாரியை நகர்த்தும்படி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதன்காரணமாக அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நிறுவன ஊழியர்கள் முகமது அன்வர்ராஜா(31), அரவிந்த(39) ஆகியோர் அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்