Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!

திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியை சோதனை செய்தபோது அவர் 7,100 சவுதி ரியால்கள் 2,750 யூரோக்கள், 16,100 அமெரிக்க டாலர்கள், 500 பவுண்ட்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தார்.

 

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய மதிப்பு ரூ.17 லட்சத்து 76 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்