திருச்சி விமான நிலையம் அருகே 16 பவுன் நகைகள் கொள்ளை * பூட்டிய வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை…!
திருச்சி, விமான நிலைய பகுதி சந்தோஷ் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ராணி ஜூலியட் ரத்னா (55). சேவியர் ராஜா மஸ்கட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராணி, வீட்டை பூட்டிவிட்டு தன் கணவரை பார்க்க மஸ்கட் சென்றிருந்தார். பின்னர் திருச்சி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16.5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.