Rock Fort Times
Online News

திருச்சி மாநகரத்தில் காணாமல் போன 153 செல்போன்கள் மீட்பு…

திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

இதன் பயனாக கண் டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரகத்தில் 21 செல்போன்களும், கே.கே.நகர் சரகத்தில் 11 செல்போன்களும், பொன்மலை சரகத்தில் 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 10 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் என ₹ 25 லட்சம் மதிப்புள்ள 153 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. அவற்றில் 127 செல்போன்களை இன்று(31-01-2024) திருச்சி மாநகரம் கேகேநகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார். அப்போது காவல் துணை ஆணையர்கள் அன்பு, செல்வகுமார் மற்றும் உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்