திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு 150 தூய்மை பணியாளர்கள் , 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். மேலும், மழைநீரை உறிஞ்சுவதற்காக 10 ஹெச்பி மோட்டார்கள், 6100 குடிநீர் பாட்டில்கள்,1350 பிஸ்கட் பாக்கெட்கள், 2850 பிரட்கள் , 4150 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் ஆகியவையும் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வே. சரவணன் ஆகியோர் அனுப்பி வைத்தார்கள். திருச்சி மாநகராசியில் இருந்து இளநிலை பொறியாளர்கள் இரண்டு பேர் மற்றும் ஊழியர்கள் ஐந்து பேருடன்,ஒரு டிப்பர் லாரியில்,10 குதிரை திறன் கொண்ட 3 நீர் இறைக்கும் டீசல் இயந்திரமும், 5 குதிரை திறன் கொண்ட 2 நீர் இறைக்கும் டீசல் இயந்திரமும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, மழை நீரை வெளியேற்றுவதற்காக, ஊழியர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.