Rock Fort Times
Online News

திருச்சி என்.ஐ.டி.யில் வருகிற 22 ஆம் தேதி முதல் 13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் பிரக்யான் தொழில்நுட்ப விழா…!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பிரக்யான் 24 என்ற தலைப்பிலான தொழில்நுட்ப விழா , வருகிற 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் ஜி. அகிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி என்ஐடியில் தேசிய அளவில் ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் நடத்தப்படும் பிரக்யான் தொழில்நுட்ப விழாவானது, இந்த ஆண்டு வருகிற 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை எல்அன்ட்டி ஏவுகணைகள் தொழில் பிரிவின் தலைவர் லக்ஷ்மேஷ் தொடங்கி வைக்கிறார். இதில், மருத்துவத்தில் நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் ராபர்ட், எப்”ஃ”பிஐ முன்னாள் ஏஜென்ட் ஸ்காட் ஆகன்ட்பவும், தொல்பொருள் ஆய்வாளர் அர்ஷ் அலி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சேஷசாயி காந்தம்ராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்கும் பயிலரங்கமும் நடைபெறுகிறது. நிறைவு நாள் விழாவில் சிஎஸ்ஐஆர் இயக்குநர் கலைச்செல்வி பங்கேற்கிறார். பிரக்யான் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயோனிக் க்வாட்ரப்பிள் ரோபோட், மல்டி ஹூமனாய்டு ரோபோ ஷோ, சைகையால் கட்டுப்படுத்தப்படும் ட்ரோன், யுவி ட்ரோன், ரூமி ஹைப்ரீட் ராக்கெட்டுகள், செயற்கைகோள்களும், இஸ்ரோ மற்றும் ஆவடி படைக்கலத் தொழிற்சாலை பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படும். இதில், சிமோஸ் அனலாக் சர்க்யூட் டிசைன், செயற்கை நுண்ணறிவு, அப்ஸ்டாக்ஸ், லேட்டன்ட் வைபேஜ், ஆட்டோ டெஸ்க், ஹேக்கிங், சைபர் பாதுகாப்பு போன்ற பயிற்சி பட்டறைகளும், மேலாண்மை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ் பிரிவுகளில் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. பிரக்யான் விநாடி வினா, ஸ்டார்ட்அப் அரினா, வாட்டர் ராக்கெட்டரி, பிஸ்ட் ஆப் காட், கேப்ச்சர் தி “ஃ”பிளாக் போன்ற நிகழ்வுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. போட்டிகளில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 3,000 மாணவர்கள் நேரடியாகவும், இணையதளம் வழியாக சுமார் 10,000 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றார் . பேட்டியின்போது பிரக்யான் தலைவர் விஜய் மகேஷ் , டாக்டர் ஷோபிதா பவுலோஸ், ஆலோசகர் டாக்டர் கார்வேம்பு, டாக்டர் ஜித்ராஜ், டாக்டர் சங்கரநாராயணன், டாக்டர் தீபக், துஷாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்