தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இம்மாதம் மார்ச் 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். இதுவரை மொழிப்பாடங்கள் உள்பட 4 தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை( மார்ச் 17) செவ்வாய்கிழமை கணிதம், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகின்றன. அதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வருகிற 27-ந்தேதி மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. பின்னர், அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீடு மையங்களுக்கு ஏப்ரல் 4-ந்தேதி அனுப்பி வைக்கப்படுகின்றன. முதன்மை தேர்வாளர்கள் ஏப்ரல் 8-ந்தேதி விடைத்தாள்களை மதிப்பீடு செய்வார்கள். அதன் பிறகு ஏப்ரல் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும் என்று என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.