முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்… எடப்பாடி பழனிசாமி அதிரடி..!
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் – அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் செங்கோட்டையன் ஒன்றாக கலந்து கொண்டார். இதனால் அதிருப்தி அடைந்த ர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேரையும் தற்போது கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச்செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.