Rock Fort Times
Online News

திருச்சியில் டாக்டர் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு…

திருச்சி உறையூர் சீனிவாசா நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 48). டாக்டர். தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11 ந்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் இருக்கும்  தனது சகோதரர் வீட்டிற்கு  சென்றிருந்தார். அங்கு தீபாவளி கொண்டாடிவிட்டு நேற்று ( 13.11.2023 )  காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பாத்திமா வழக்குபதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்