திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆலம்பாடி மேட்டூர் நடுத் தெருவை சேர்ந்தவர் அழகிரி. இவரது மனைவி வனிதா. இவர் நாமக்கல்லில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக ஆலம்பாடி மேட்டூரில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி லால்குடி பேருந்து நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து மற்றொரு அரசு பஸ்ஸில் ஏறி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து சேலம் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தான் கொண்டு வந்த ஹேண்ட் பேக்கை பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 1/2 பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ் என 11 1/2 பவுன் நகைகளை காணாதது கண்டு திடுக்கிட்டார். அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது யாரோ மர்ம ஆசாமி நைசாக நகைகளை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து
கொள்ளிடம் காவல் நிலையத்தில் வனிதா கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.