Rock Fort Times
Online News

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியீடு..

தமிழ்நாட்டில் 10, 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மார்ச் ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது. 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எதிர்வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கும், 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.inஆகிய இணையதள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்