Rock Fort Times
Online News

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் மாதம் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்….!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது அக்டோபர் மாதம் என்பதால், அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2025-2026 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக இன்று(அக். 25) செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், “அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்