தமிழகத்தில் 10 மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம். பொதுத்தேர்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறோம். அதன்படி, 12 ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 11ம் வகுப்பை பொறுத்தவரை பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நடைபெறும். 12 ம் வகுப்பு மெயின் தேர்வு மார்ச் மாதம் 3 ம் தேதி ஆரம்பித்து, மார்ச் மாதம் 25ம் தேதி வரை நடைபெறும். 11 ம் வகுப்புக்கான மெயின் தேர்வு மார்ச் மாதம்5 ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புக்கான மெயின் தேர்வு மார்ச் மாதம் 28ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 15 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் தேதியைப் பொறுத்தவரை 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவு மே மாதம் 9 ம் தேதி வெளியிடப்படும். 11 ம் வகுப்புக்கான முடிவுகள் மே 19 ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 19 ம் தேதி வெளியிடப்படும்’ என தெரிவித்தார்.
Comments are closed.