”தீபாவளி பண்டிகையை ஒட்டி, 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், 50 சதவீத ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படும்,” என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரயில் நிலையங்களில் மூன்று கட்டங்களாக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த துாய்மை பணிகளில், 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 8.6 டன் பிளாஸ்டிக் மற்றும் 165 டன் இரும்பு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.