Rock Fort Times
Online News

தமிழகத்தில் இன்று (மார்ச் 2) தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வில் 10 ஆயிரம் பேர் ஆப்செண்ட்…!

தமிழகத்தில் பிளஸ்- 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(02-03-2026) தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ மாணவியரும், தனித் தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும், சிறைத் தேர்வர்களாக 281 பேரும் தமிழ் பொதுத்தேர்வு எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய பொதுத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று நடந்த பிளஸ்- 2 தமிழ் பொதுத்தேர்வில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்கள் 8 ஆயிரத்து 319 பேரும், தனித்தேர்வர்கள் ஆயிரத்து 600 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 919 பேர் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்