1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்…* தமிழக வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்…!
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று(15-03-2025) தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
* மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
* வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.
* 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு.
* டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
* வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
* கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
* முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு.
* முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்.
* நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* முதல்வர் மண் உயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.
* மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
* முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.
* தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
இதுபோன்று வேளாண் பட்ஜெட்டில் மேலும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
Comments are closed.