Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்…* தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில் கடந்த டிச. 19 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜன. 30 வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மேலும் அவகாசம் வழங்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்