10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்- டிச.19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி(லேப் டாப்) வழங்கும் திட்டத்தை டிசம்பர் 19ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ‘விலையில்லா லேப்டாப்’ வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டடு வந்தது. இதற்கிடையே, கொரோனா காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்த பின்னர், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது. அதன் பின்னர், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் எனவும்,20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் எனவும் கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதில் முதற்கட்டமாக, 10 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய Acer, Dell, HP ஆகிய 3 நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியது. இந்நிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை, டிசம்பர் 19ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், பிப்ரவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.