தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய( ஏப்ரல் 1) கூட்டத்தொடரில் திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்து பேசிய திருநெல்வேலி பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்தார். அந்தவகையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். அதேபோல பரிசோதனை முறையில், திருச்சியில் 7 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி பார்க்க வேண்டும். அப்போது, அலுவல் ரீதியாக என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளலாம்,” என்றார். அப்போது இடையே பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, டெல்லியை போல சென்னையை இரண்டாவது தலைநகராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “அதற்கான காலச் சூழல் ஏற்படும் பட்சத்தில் மாற்றப்படலாம்”, என்றார். இதனால் பேரவையில் தலைநகர் குறித்த சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.
Comments are closed.