திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தணூர் என்ற இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேசாலையில் திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில், எதிர்பாராத விதமாக லாரியும்-காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் பலியானவர்கள் உடல்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து நேரிட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.