Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திமுக கொடி கட்டிய காரில் வந்து ஆடு திருடிய கும்பல் கைது !

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். ஆடுகள் வளர்த்து, தங்களது வாழ்வாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 13ம் தேதி இவர்களது ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, திமுக கொடி கட்டிய பார்ச்சூனர் கார் ஒன்று வந்தது.  அதில் இருந்த மூன்று பேர், கூட்டமாக சென்ற ஆடுகள் பக்கத்தில் காரை நிறுத்தி, 3 ஆடுகளை திருடிச் சென்றனர்.  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மணிகண்டனும், கணேசனும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  திமுக கொடி கட்டிய ஃபார்ச்சூனர் காரில் வந்தவர்கள் மூன்று பேர் யார்? என்பது குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.  அப்போது, ஆடுகளை திருடிய கார், பெரம்பலூர் பக்கம் சென்றது தெரிய வந்தது. அதையடுத்து, பெரம்பலூரில் முகாமிட்ட போலீசார்,  வாலிகண்டபுரத்தை சேர்ந்த மொய்தீன் (வயது 38) என்பவரை கைது செய்ததோடு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள கார் கன்சல்டிங் மையத்திற்கு சென்ற மொய்தீன், பார்ச்சூனர் கார் ஒன்றை, 5 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து காரை எடுத்துள்ளார்.  பெரம்பலூர் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் ஆடுகளை திருடிவிட்டு சென்றது தெரிய வந்தது.  இதையடுத்து, மொய்தீன் மற்றும் காரை விற்பனை செய்த நபர் என மூன்று பேரை கைது செய்து ஸ்ரீரங்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்